dinamalar telegram
Advertisement

உள்ளூர் வர்த்தக செய்தி - ஈரோடு

* ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 22,591 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 22.29 ரூபாய் முதல், 24.39 ரூபாய் வரை ஏலம் போனது.
* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, நாட்டு சர்க்கரை, 30 கிலோ மூட்டையாக, 2,100 மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை, 1,100 ரூபாய் முதல், 1,160 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,600 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,100 ரூபாய் முதல், 1,220 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. அச்சு வெல்லம், 900 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,000 ரூபாய் முதல், 1,150 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. கடந்த வாரத்தைவிட வெல்லம் வரத்து சற்று உயர்ந்துள்ளது. அதேநேரம் நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் மூட்டைக்கு, 60 ரூபாய் விலை குறைந்து காணப்பட்டது.

* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 40 ரூபாய், நேந்திரன், 38 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 380, தேன்வாழை, 540, செவ்வாழை, 610, பச்சைநாடான், 410, ரஸ்த்தாளி, 500, ரொபஸ்டா, 390, மொந்தன், 380 ரூபாய்க்கும் விலைபோனது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய் ஒன்பது ரூபாய் முதல், 14 ரூபாய் வரை விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில், 32 விவசாயிகள், 7,300 தேங்காய் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 24.65 ரூபாய்; இரண்டாம் தரம், 19.10 ரூபாய் என, 73 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதேபோல் கொப்பரை ஏலம் நடந்தது. இதில், 2019 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ, 55.15 ரூபாய் முதல், 76.15 ரூபாய் வரை ஏலம் போனது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement