dinamalar telegram
Advertisement

7 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்; அமைச்சர் தகவல்

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலக பின்புறம், 'பசுமை தமிழக இயக்கம்' திட்டத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மரக்கன்றுகளை நட்டு கூறியதாவது:
இத்திட்டத்தில் வண்டலுாரில் முதல்வர் மரக்கன்றுகளை நடவு செய்து, திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். இன்று (நேற்று) ஒரே நாளில் மாவட்டத்தில், 4,000 மரக்கன்று நடப்படும். இம்

மாவட்டத்தில் நடப்பாண்டில், ஏழு லட்சம் மரக்கன்றுகளும், அடுத்தாண்டு, 20 லட்சம் மரக்கன்றுகளும் நடப்படும். தமிழகத்தில், 23.27 சதவீத பசுமை பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வனத்தில் உள்ள வெளிநாட்டு மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரத்துக்கு பதில், தலா, 10 மரங்கள் புதிதாக நடப்படும். ஈரோட்டில் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர், பூங்காவை அழித்ததாக வந்த தகவல் குறித்து விசாரிக்கிறோம். தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சூளையில் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு தனியார் நிலம் வாங்க, திட்ட மதிப்பீட்டை நிதித்துறைக்கு அனுப்பி னோம். அத்தொகை அதிகம் உள்ளதாக கூறியதால், நில உரிமையாளரிடம் பேசி சம்மதிக்க முயல்கிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
சுப்புலட்சுமி விலகல்
வருத்தத்துக்குரியது
'தி.மு.க., துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கட்சியில் இருந்து
விலகியதற்கு, அமைச்சராகிய நீங்களும் சில தி.மு.க., நிர்வாகிகளும் காரணம் என்பது போல, அவரது கணவர் வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். உங்கள் கருத்து என்ன?' என நிருபர்கள் கேட்டார்.
அமைச்சர் முத்துசாமி, ''இங்கு அரசு நிகழ்ச்சி நடக்கிறது. அரசியல் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. எனினும் அவர் விலகியது வருத்தத்துக்குரியது. இதுபற்றி பின்னர் தெளிவாக விளக்கம் அளிக்கிறேன்,'' என்றார். எம்.பி.,க்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், அரசு கேபிள் 'டிவி' நிறுவன தலைவர் சிவகுமார், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement