dinamalar telegram
Advertisement

செய்திகள் சில வரிகளில் ஈரோடு

சென்னிமலையில் கனமழை
சென்னிமலை, செப். 25-

சென்னிமலை பகுதியில் நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது.
சென்னிமலை டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஐந்து நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. நேற்றும் வெயில் வாட்டியது. மாலை, 4:35 மணிக்கு கருமேகம் திரண்டு, காற்று, இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. ஒரு மணி நேரம் அதே வேகத்தில் கொட்டித் தீர்த்தது. பின் துாறல் மழை பெய்தது. கன
மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இளம் நாடி ஜோதிடர்
ஏரியில் மூழ்கி பலி
அந்தியூர், செப். 25-
அந்தியூர் அருகே, ஏரியில் குளித்த இளம் நாடி ஜோதிடர், தண்ணீரில் மூழ்கி பலியானார். தஞ்சை, புதுாரை சேர்ந்த கார்த்தி, 18; நாடி ஜோதிடர். சில நாட்களுக்கு முன், அம்மா மற்றும் அண்ணனுடன், அந்தியூருக்கு வந்தார். வாரச்சந்தை வளாகத்தில் தங்கி, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு சென்று நாடி ஜோதிடம் பார்த்து வந்தார்.
நேற்று காலை குளிப்பதற்காக, வெள்ளித்திருப்பூர் சாலையில் உள்ள பெரிய ஏரிக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால், குடும்பத்தினர் ஏரி பகுதி யில் தேடினர். ஏரி உபரிநீர் செல்லும் பகுதியில் கார்த்தி பிணமாக மிதந்தார். குடும்பத்தினர் புகாரின்படி அந்தியூர் போலீசார் சென்றனர். பிணத்தை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நவம்பரில் பேரணி நடத்த
அட்வகேட் கிளர்க்ஸ் முடிவு
ஈரோடு, செப். 25-
தமிழ்நாடு அட்வகேட் கிளர்க்ஸ், வெல்பேர் அசோசியேஷன் சங்கத்தின், மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். மாநில தலைவர் லெங்காராம் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் தேவராஜ், சிறப்புரையாற்றினார். உயர்நீதிமன்ற மதுரை கிளை பாண்டி, மாநில பொருளாளர் செல்வம், நிறுவன தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நவம்பரில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க, முதல்வர் தரிசன பேரணி நடத்த வேண்டும். சேம நல நிதியை ஏழு லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். வக்கீல் எழுத்தர்களுக்கு மாவட்டம் தோறும் குடியிருப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேலை கிடைக்காத விரக்தி
'ரெப்ரசன்டேடிவ்' தற்கொலை
ஈரோடு, செப். 25-
வேலை கிடைக்காத விரக்தியில், முன்னாள் 'ரெப்ரசன்டேடிவ்', தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு, பூந்துறை ரோடு, எஸ்.ஜெ.பி., ரெசிடென்சியை சேர்ந்தவர் அக்பர் அலி, 48; டெப்லெட் இந்தியா கம்பெனி மருந்து விற்பனை பிரதிநிதியில் வேலை செய்த நிலையில், இரு மாதங்களுக்கு முன் வேலையை விட்டு நின்று விட்டார். இந்நிலையில் சரிவர வேலை கிடைக்கவில்லை. இரு மகன்கள் கல்வி கற்று வரும் நிலையில், வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்தார்.
கடந்த, 22ம் தேதி இரவு அறைக்குள் சென்றவர், மறுநாள் காலை, 9:00 மணி வரையாகியும் கதவை திறக்கவில்லை. மனைவி, மகன்கள் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அசைவின்றி அக்பர் அலி கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஈரோடு தாலுகா போலீசார்
விசாரிக்கின்றனர்.
செங்கல் சூளை
தொழிலாளி பலி
அந்தியூர், செப். 25-
அந்தியூரில், அதீத போதையால், செங்கல் சூளை தொழிலாளி, சாக்கடையில் விழுந்து இறந்தார்.
அந்தியூரில், அத்தாணி செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை அருகில், சாக்கடையில் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீசாருக்கு, நேற்று முன்தினம் இரவு தகவல் போனது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அந்தியூர் அருகே புதுமேட்டூரை சேர்ந்த பொம்முசாமி, 53, என்பது தெரிந்தது. அதே பகுதி யில் செங்கல் சூளையில் கூலி வேலை செய்தார். மனைவி இறந்த நிலையில் தனியாக வாழ்ந்தவர், போதை பழக்கத்துக்கு அடிமையானார். அதீத மது போதையில் சாக்கடையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement