dinamalar telegram
Advertisement

9வது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிப்பு

ADVERTISEMENT
வேலுார்: ஒன்பதாவது முறையாக நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது தாய் பத்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமலிருந்தது. இதனால் தன்னை கவனித்துக் கொள்ள நளினிக்கு பரோல் வழக்கும்படி தமிழக அரசுக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் கோரிக்கையை ஏற்கப்பட்டு, கடந்த டிச., 23 ம் தேதி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.

இதனால் காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தாய் பத்மாவுடன் தங்கியிருந்தார். கடந்த சில மாதங்களாக பத்மா கோரிக்கை ஏற்கப்பட்டு நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நளினி இன்று (24) சிறைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அவரது தாய் பத்மா கோரிக்கை ஏற்கப்பட்டு ஒன்பதாவது முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அக்., 25 ம் தேதி நளினி சிறைக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.



வாசகர் கருத்து (15)

  • Nandakumar Naidu. -

    குற்றவாளிக்கு துணை போகும் விளங்காத விடியல் அரசு.

  • சீனி - Bangalore,இந்தியா

    வீடு எடுத்துக்கொடுத்து பார்த்துக்கொள்ளலாம். இன்னும் என்னென்ன கூத்து நடத்துமோ விடியல்.

  • RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்

    அப்படியே விடுதலை பண்ணிடுங்க , கேவலப்பட்ட ராஜாங்கம்

  • Indhuindian - Chennai,இந்தியா

    ஜெயில்லேந்து வுட்டுடுவோம்னு சொன்னோம் நீங்க அனுமதி குடுக்கல்லே ஆனா விநஃஜான வூஷல் பண்ண எங்களுக்கு எப்படி வெளியிலே கொண்டு வரணும்ன்னு தெரியாதா நீங்க தட்டுல பூந்தா நாங்க காலத்துலே பூந்துடுவோம் இது திராவிட மாடல்

  • Siva Kumar - chennai,இந்தியா

    இந்த அரசில் எவனுக்காவது நாட்டு பற்று இருந்தால், இந்த இலங்கை கொலைகாரர்களுக்கு பராலோ விடுதலையோ வேண்டும் என்று சிந்திக்க மாட்டான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement