dinamalar telegram
Advertisement

வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டி நடத்த ஆலோசனை

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், அனைத்து சட்டசபை தொகுதிகளில் இருந்து வரப்பெற்ற ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு முன்மொழிவு தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதியில், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானிசாகர் தொகுதியில் எவ்வித திருத்தமும் இல்லை. ஈரோடு கிழக்கில், மாநகராட்சி ஆரம்ப பள்ளி பி.மாரியம்மன் கோவில் வீதியி பழைய கட்டடம் பழுதடைந்ததால், கருங்கல்பாளையத்தில் உள்ள டிவைன் ஆரம்ப பள்ளி முதல் அறைக்கும், கருங்கல்பாளையம் விநாயகர் கோவில் வீதி மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடி மையத்தில் சிமென்ட் சீட்டை எடுத்து தார்சு கட்டடமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மரப்பாலம் ரோடு, பி.மாரியம்மன் கோவில் வீதி, மாநகராட்சி ஆரம்ப பள்ளியில் மேற்கு பார்த்த சிமென்ட் சீட்டால் வேயப்பட்ட கட்டடத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையம், அதே கட்டடத்தின் சிமென்ட் சீட்டை எடுத்து தார்சு கட்டடமாக மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்று நான்கு சட்டசபை தொகுதியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு போட்டிகள் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தாண்டு, 'எனது வாக்கு எனது உரிமை', 'ஒரு வாக்கின் மகிகை' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு பள்ளி, கல்லுாரிகளில் அக்.,10க்குள் நடத்தி, போட்டியாளர்களின் படைப்புகளை அக்., 30க்குள் பி.டி.எப்., வடிவில் கலெக்டர் அலுவலக மின்னஞ்சல் முகவரி ecuerode@gmail.com க்கு அனுப்ப வேண்டும். அதில் சிறந்த போட்டியாளர்களின் படைப்பு தேர்வு செய்து ஜன., 25ல் தேசிய வாக்காளர் தினத்தன்று சிறப்பு பரிசு வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள், மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். இவ்வாறு பேசினார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) குமரன், (சத்துணவு) மணிவண்ணன், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி உட்பட பலர் பங்கேற்றனர்.+



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement