நாகர்கோவில் : பத்மனாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று நவராத்திரி பவனி புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம்நேற்று காலை புறப்பட்டது.
திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் கவியரசர் கம்பர் வழிப்பட்ட சரஸ்வதி தேவி கோவில் உள்ளது. மன்னர் காலத்தில்இங்கு நவராத்திரி விழா நடந்தது.பின் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டதும் மன்னர் உத்தரவின்படி சரஸ்வதி விக்ரகம் அங்கு கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி விழா நடந்தது.
மன்னர் காலத்துக்கு பிறகும் இந்த மரபு மாறாமல் தொடர்ந்து நடக்கிறது.செப்., 26 துவங்கும் விழாவுக்காக பத்மனாபபுரத்தில் இருந்து இன்று காலை 7:30 மணிக்கு நவராத்திரி பவனி புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம் நேற்று காலை புறப்பட்டது. போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தியபின் நாகர்கோவில் வழியாக குமாரகோயில் சென்றது.
இன்று காலை குமாரகோயில் முருகன் மற்றொரு பல்லக்கில் பத்மனாபபுரம் புறப்படுவார். நவராத்திரி பவனியில் சரஸ்வதிதேவிக்கு துணையாக செல்வதாக ஐதீகம். மூன்றாண்டுகளாக கொரோனாவால் கட்டுப்பாடுகளுடன் இந்த பவனி நடந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!