dinamalar telegram
Advertisement

நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் மத்திய அமைச்சர் வி.கே. சிங் தகவல்

நாகர்கோவில்:நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கூறினார்.
நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் கன்னியாகுமரி - காஷ்மீர் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு கன்னியாகுமரி அருகே நரி குளத்தில் உள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் சேதப்படுத்தி உள்ளனர். இது ஒரு ஒழுக்கமற்ற செயலாகும்.

ஆறாயிரம் ஆண்டுகளாக இந்தியா மதச்சார்பற்ற தன்மையுடன் தான் உள்ளது. பாரத் ஜோடோ யாத்திரையில் அரசியலையும் மதத்தையும் ராகுல் இணைத்துள்ளார். சில மத தலைவர்களை மட்டும் சந்தித்துள்ளார். இந்த யாத்திரையின் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார். காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டன. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு சாலை பணிகள் சுறுசுறுப்பாக நடக்கின்றன.
நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதுவரை 65 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மாநில அரசு இடம் வழங்கினால் குமரியில் விமான நிலையம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிரணி தலைவி உமாரதி, மாவட்ட பொருளாளர் முத்துராமன் உடனிருந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement