ADVERTISEMENT
நாகர்கோவில்:வரதட்சணை கொடுமையால் ரயில் முன் பாய்ந்து இரு குழந்தைகளுடன் இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவர், அவரது தம்பிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது.
நாகர்கோவில் தேங்காய்பட்டணம் அருகே வேட்டமங்கலத்தை சேர்ந்தவர் அஜிதா 30. கணவர் ஜெஸ்டின்சன் 37. இவர்களுக்கு 2005ல் திருமணம் நடந்தது. 38 சவரன் நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாய், ஜெஸ்டின்சனுக்கு 7 சவரன் தங்கச்செயின் வரதட்சணையாக வழங்கப்பட்டது. இவர்களுக்கு ஜெபிஷோ அபிஷேக் 5, ஜெபிஷா அபிஷேக் 4, ஆகிய குழந்தைகள் இருந்தன.

அஜிதா கணவரின் தம்பி நிக்சன் சாமுவேலுக்கு கல்லுாரியில் பேராசிரியர் பணிக்காக 3 லட்சம் ரூபாய் கேட்டு அஜிதாவை கொடுமைபடுத்தினர். மனமுடைந்த அஜிதா 2012ல் கன்னங்கோடு பகுதியில் ரயில் முன் குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்த வழக்கில் ஜெஸ்டின்சன் மற்றும் நிக்சன் சாமுவேலுவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை, 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சசிரேகா தீர்ப்பளித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!