Advertisement

தமிழ் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறோம்: ராகுலிடம் கூறிய கன்னியாகுமரி பெண்கள்

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோயில்: பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கன்னியாகுமரியில் பெண்களை சந்தித்தார். அப்போது, தமிழ் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக பெண்கள் கூறியதை கேட்ட ராகுல் சிரித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் ராகுல் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இந்த யாத்திரை நேற்று(செப்.,10) தமிழகத்தில் நிறைவு பெற்றது. இன்று கேரளாவில் தனது யாத்திரையை ராகுல் தொடர்கிறார். இந்த பயணத்தின் போது பல்வேறு தரப்பினரை ராகுல் சந்தித்து வருகிறார்.

நேற்று மார்த்தாண்டம் பகுதியில் 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றிய பெண்களை ராகுல் சந்தித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மார்த்தாண்டத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களை ராகுல் சந்தித்தார். அப்போது, அந்த பெண்கள், ராகுலிடம் கூறுகையில், நீங்கள் தமிழகத்தின் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்பது தெரியும். ராகுலுக்கு தமிழ் பெண்ணை திருமணம் செய்து வைக்க தயாராக உள்ளோம் என அந்த பெண்கள் குறிப்பிட்டனர். இதை கேட்ட ராகுல் ஜாலியாக சிரித்தார் எனக்கூறியதுடன் அந்த படத்தை ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ளார்.



வாசகர் கருத்து (47)

  • Sutha - Chennai,இந்தியா

    எல்லாம் .......

  • kulandai kannan -

    ராகுல்.......??

  • பேசும் தமிழன் -

    அய்யா நினைத்த நேரத்தில் பட்டாயா பறந்து விடுவார் என்பது.... அந்த பாட்டிக்கு தெரியாது போல....

  • ஆரூர் ரங் -

    பெண் கிடைப்பது சாத்தியமில்லாதது..வேறு மாற்று ஏற்பாட்டையாவது தேடலாம்😇.

  • Yogeshananda - Erode,இந்தியா

    ஒன்றும் செய்ய முடியாது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement