dinamalar telegram
Advertisement

ராகுல் டீ ஷர்ட் விலை என்ன?காங்., அழகிரி புதிய விளக்கம்!

ADVERTISEMENT
நாகர்கோவில்:''ராகுலின் எளிமையை களங்கப்படுத்தும் வகையில், அவர் அணிந்துள்ள, 'டீ ஷர்ட்' பற்றி பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர்,'' என்று காங்., மாநில தலைவர் அழகிரி கூறினார்.நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:ராகுல் நடைபயணம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் அவரை சந்திக்கின்றனர். ராகுலின் எளிமையான தோற்றம் அவர்களை கவர்ந்துள்ளது.அவர் சொல்லும் கருத்துக்கள் அனைவரும் விரும்பும் வகையில் உள்ளது. இது சமுதாயத்தை சீரமைப்பதற்கான நடைபயணம். வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டுமல்ல. இந்திய மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் நடைபயணம்.ராகுல் அணிந்துள்ள டீ -ஷர்ட், திருப்பூரில் கோல்டன் ஐஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. மொத்தம், 20 ஆயிரம் டீ -ஷர்ட்டுகள் தயாரித்தோம். கட்சியினர் அனைவரும் அந்த டீ -ஷர்ட் தான் அணிகின்றனர். தொண்டர்கள் அணிந்துள்ள டீ -ஷர்ட்களில் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன.ராகுல் அணிவதற்காக படம் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த டீ -ஷர்ட், 40 ஆயிரம் ரூபாயும் அல்ல; 4 லட்சம் ரூபாயும் அல்ல. மோடி தான், 10 லட்சம் ரூபாய் மதிப்பு 'கோட்' அணிகிறார். அந்த எரிச்சலில் பா.ஜ.,வினர் இதை விமர்சிக்கின்றனர்.ராகுல் எளிமையாக வருவதை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் சொல்கின்றனர். அந்த விமர்சனம் தவறு. பல தரப்பினரையும் ராகுல் சந்தித்துள்ளார். எங்கள் கருத்தோடு ஒத்துவராதவர்களும் கருத்துக்களை சொல்கின்றனர்.காங்கிரசை கடந்த காலங்களில் விமர்சித்தவர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். எல்லாவற்றையும் நாங்கள் கேட்டுக் கொண்டோம். அதில், எது சரியோ அந்த கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். இந்த பயணம் மாபெரும் வெற்றி பயணமாக அமைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (1)

  • ताजा -

    ok then what is the actual price you didnt tell।।।। .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement