dinamalar telegram
Advertisement

இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது!கன்னியாகுமரியில் காங்., ராகுல் ஆவேசம்

ADVERTISEMENT
நாகர்கோவில்:''இந்தியாவை எவராலும் பிளவுபடுத்த முடியாது. எத்தனை மணி நேரம் அடைத்து வைத்து கேள்வி கேட்டாலும் கவலைப்பட மாட்டோம்,'' என, கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்., - எம்.பி., ராகுல் பேசினார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான 150 நாள், 'பாரத் ஜோடோ' என்ற பெயரிலான ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் நேற்று மாலை ராகுல் துவக்கினார்.முன்னதாக, விகோனந்தர் மண்டபம், காந்தி மண்டபத்தில் தியானம் செய்தார். காந்தி மண்டபத்திற்கு வெளியே ராகுலிடம் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி யாத்திரையை துவக்கி வைத்தார்.

பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:தேசத்தை ஒற்றுமைப்படுத்த உணர்வு தேவைப் படுவதால் இந்த பாத யாத்திரை நடத்தப்படுகிறது. இந்தியாவின் குரல் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு ஜனநாயக நிறுவனமும் ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,வால் அச்சுறுத்தப்படுகிறது. தனிப்பட்ட முறையில் அவர்கள் நாட்டின், மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் என நினைக்கின்றனர்.
எதிர்க்கட்சிகளை சி.பி.ஐ., வருமான வரித்துறை, வருவாய் புலனாய்வுத்துறை மூலம் மிரட்ட பார்க்கின்றனர். இந்தியர்களை பற்றி அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இந்திய மக்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள் என அவர்களுக்கு தெரியவில்லை.எத்தனை மணி நேரம் அடைத்து வைத்து கேள்வி கேட்டாலும் கவலைப்பட மாட்டோம்.
எங்களை முடக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது. நாட்டை மதம், மொழியின் மூலம் பிளவுபடுத்தலாம் என பா.ஜ., நினைக்கிறது; அது முடியாது.குறிப்பிட்ட பெரும் தொழிலதிபர்கள், நாட்டின் பொருளாதாரத்தை கையில் வைத்திருக்கின்றனர். அவர்கள் இல்லாமல் பிரதமரால் அரசியல் ரீதியாக ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது.
விலைவாசியால் இதுவரை வரலாற்றில் இல்லாத மோசமான காலக்கட்டத்தில் தள்ளப்பட்டு உள்ளோம். எனவே, இந்தியர்களை ஒற்றுமைப்படுத்தும் அவசியம் ஏற்படுள்ளது.அது தான் நான் துவக்க இருக்கும் பாரத் ஜோடோ யாத்திரை. அதன் மூலம் மக்களின் கோரிக்கைகளை, உணர்வுகளை, கேட்க முடியும்.
இங்கு வந்து வாழ்த்திய, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. நடைபயணம் துவங்கும் போது மக்கள் அன்பை பெறுவேன் என நம்புகிறேன்.இவ்வாறு ராகுல் பேசினார்.தமிழக காங்., தலைவர் அழகிரி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.

ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி

'
பாரத் ஜோடா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை, ராகுல் கன்னியாகுமரியில் துவக்கினார். இதற்காக நேற்றுமுன்தினம் இரவு டில்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார். நேற்று காலை 6:00 மணிக்கு, ஸ்ரீபெரும்புதுாருக்கு காரில் சென்றார். அங்கு, அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவ் நினைவிடத்தில், மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
நினைவிடத்தில் மரக்கன்று நட்டார். நினைவிட பராமரிப்பாளர்கள் மற்றும் ராஜிவுடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன், புகைப்படம் எடுத்துக் கொண்டார். நினைவிட நுழைவு வாயில், கட்சிக் கொடியேற்றினார்.காலை 7:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டார். சென்னை விமான நிலையம் சென்று, தனி விமானத்தில் திருவனந்தபுரம் சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி சென்றார்.'நாட்டை இழக்க மாட்டேன்'


ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் நினைவிடத்தில், கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த ராகுல், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:பிரிவினை அரசியலாலும், வெறுப்பாலும், நான் என் தந்தையை இழந்தேன். ஆனால் ஒருபோதும் நான் நேசிக்கும், இந்த நாட்டை இழக்க மாட்டேன். வெறுப்பை அன்பால் வெல்லலாம். பயத்தை தன்னம்பிக்கையால் வெல்லலாம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தடைகளை வெல்வோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.வாசகர் கருத்து (1)

  • Wilson Nesamony - Mumbai,இந்தியா

    எத்தனை மணி நேரம் அடைத்து வைத்து கேள்வி கேட்டாலும் கவலைப்பட மாட்டோம். யாத்திரைக்கான காரணம் இது தான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement