Advertisement

தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிப்பு பா.ஜ., அண்ணாமலை குற்றச்சாட்டு

நாகர்கோவில்:''இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக குற்றங்கள் நடக்கின்றன,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:மத்தியில், காங்கிரஸ் ஆட்சியில் சீரழிந்த இந்தியா, எட்டு ஆண்டு மோடி ஆட்சியில் எப்படி வளர்ச்சி பெற்றது என்பதை ராகுல் தன் பாத யாத்திரையில் தெரிந்து கொள்வார்.பாத யாத்திரை முடியும் போது, மோடியின் பக்தனாக ராகுல் இருப்பார். தி.மு.க.,வினர் நடத்தும் மருத்துவக் கல்லுாரிகளுக்காக, 'நீட்' தேர்வை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது.

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். பல கால கட்டங்களில் அ.தி.மு.க., பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ளது.தமிழகத்தில் அதிக முறை ஆட்சி செய்த கட்சி அ.தி.மு.க., தான். அதை குறைத்து மதிப்பிடக்கூடாது. சமூக ஊடகங்களை கண்காணிக்க காவல்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
ஆனால், அது நடுநிலையோடு நேர்மையாக செயல்பட வேண்டும். இந்திய அளவில் தமிழகத்தில் தான் அனைத்து வகை குற்றங்களும், விபத்துகளும் அதிகமாக நடப்பதாக தரவுகள் உள்ளன.முதல்வர் சட்டம் - ஒழுங்கு சரியாக உள்ளது என கூறுவதை ஏற்க முடியாது. கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனிமவள கடத்தலை தடுக்க முடியவில்லை என்றால், மத்திய அரசிடம் பொறுப்பை கொடுத்து விடுங்கள்; நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement