dinamalar telegram
Advertisement

தினமும் ஏழு மணி நேரம் நடக்க ராகுல் திட்டம்:பாதயாத்திரை ஏற்பாடுகள் தீவிரம்

நாகர்கோவில்:கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் தினமும் ஏழு மணி நேரம் ராகுல் நடக்கிறார். வழிகளில் பொது மக்களுடன் கலந்துரையாடவும் திட்டமிடப் பட்டு உள்ளது.

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து 12 மாநிலங்கள் வழியாக காஷ்மீருக்கு இந்த நடைபயணம் திட்டமிட்டப்பட்டுள்ளது. இதற்காக காங்., முன்னாள் தலைவரான ராகுல் செப். 7 ல் ஸ்ரீபெரும்புதுாரில் ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு மதியம் கன்னியாகுமரி வருகிறார். இங்கு விவேகானந்தர் பாறைக்கு சென்று திரும்பிய பின்னர் காந்திமண்டபம் அருகில் பாதயாத்திரையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

அங்கிருந்து காமராஜர் மண்டபத்துக்கு சென்று விட்டு நான்கு வழி சாலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல், ஸ்டாலின், கூட்டணிக்கட்சித்தலைவர்கள் பேசுகின்றனர்.தொடர்ந்து மூன்றரை கி.மீ. துாரம் நடந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரிக்கு சென்று தங்குகிறார். செப். 8 ல் இங்கிருந்து புறப்பட்டு மதியம் சுசீந்திரம் வந்து மாலையில் டெரிக் சந்திப்பில் நிறைவு செய்து இரவு ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரியில் தங்குகிறார்.

செப். 9 மதியம் புலியூர்குறிச்சியிலும், இரவு முளகுமூட்டிலும் தங்குகிறார். செப்.10 ல் இங்கிருந்து புறப்பட்டு மதியம் மார்த்தாண்டம் சென்று இரவில் செறுவாரக்கோணம் செல்கிறார்.செப். 11 ல் இங்கிருந்து கேரளா செல்கிறார். குமரி பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வருவோர் பங்கேற்க உள்ளனர். தொண்டர்களுடன் சேர்ந்து தினமும் ஏழு மணி நேரம் நடக்க திட்டமிட்டுள்ள ராகுல், வழிகளில் மக்களை சந்தித்து பேச உள்ளார். பாதயாத்திரை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement