தேங்காப்பட்டணம் துறைமுகத்தை ஆழப்படுத்த வரும் புனே இயந்திரம்
நாகர்கோவில்:தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் முகத்துவாரத்தை ஆழப்படுத்த, புனேவில் இருந்து மண் அள்ளும் இயந்திரம் வரவழைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் மீன் பிடித்து வரும் படகுகள், அடிக்கடி கவிழ்ந்து மீனவர்கள் பலியாகி வருகின்றனர். சமீபத்தில் இரண்டு விபத்துகள் அடுத்தடுத்து நடந்ததால், மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிள்ளியூர் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் தலைமையில், மீனவ பிரதிநிதிகள் தொடர் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டனர்.துறைமுகத்தை சீரமைக்க மத்திய அரசு, 150 கோடி ரூபாய், 'நபார்டு' வங்கி, 60 கோடி ரூபாய், தமிழக அரசு, 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளிவர இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.முகத்துவாரத்தை ஆழப்படுத்த, 1.18 கோடி ரூபாய் செலவில், மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து இயந்திரம் வாங்கப்படுகிறது. ஆழப்படுத்தும் பணிகள், செப்., 20ல் துவங்கும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!