dinamalar telegram
Advertisement

குமரி மாவட்டத்தில் ராகுல் நான்கு நாள் நடைபயணம்

நாகர்கோவில்:காங்., முன்னாள் தலைவர் ராகுல் எம்.பி., துவங்கவுள்ள நடைபயணத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு நாட்கள் நடந்து செல்கிறார்.
அவர் செல்லும் பாதை மற்றும் தங்கும் இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது.இந்திய ஒற்றுமை நடைபயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மூவாயிரத்து 570 கி.மீ. துாரம் ராகுல் நடைபயணம் மேற்கொள்கிறார். செப்., 7 முதல் 150 நாட்கள் இந்த யாத்திரை நடக்கிறது. இதற்காக ராகுல் செப்., 7 கன்னியாகுமரி வருகிறார்.

அன்றிரவு கன்னியாகுமரியில் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு நடந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி சென்று தங்குகிறார். எட்டாம் தேதி அங்கிருந்து புறப்பட்டு கொட்டாரம், சுசீந்திரம், கோட்டார், டெரிக் சந்திப்பு வழியாக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரியில் தங்குகிறார்.
செப்., 9 ல் சுங்கான்கடை, புலியூர்குறிச்சி, தக்கலை வழியாக முளகுமூடு செயின்ட் மேரீஸ் பள்ளி சென்று தங்குகிறார். 10 ல் சாமியார்மடம், சிராயன்குழி, மார்த்தாண்டம், குழித்துறை, படந்தாலுமூடு வழியாக செருவாரக்கோணம் சென்று தங்குகிறார். செப்., 11 கேரளாவில் பயணத்தை தொடர்கிறார். இதற்கான ஏற்பாடுகளை காங்., நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement