புத்தேரி அருகே ஒரு ரேஷன் கடையில் நான்கு 500 ரூபாய் தாள்களை கண்ட பூரிப்பில் வேலம்மாள் பாட்டி சிரித்தார்.அவரின் பொக்கை வாய் சிரிப்பை, போட்டோகிராபர் ஜாக்சன் என்பவர் கேமராவில் பிடித்து வலை தளங்களில் வெளியிட்டார்.அந்த போட்டோவை கவனித்த முதல்வர் ஸ்டாலின், 'இது போன்ற ஏழை தாய்களின் சிரிப்பு தான் நம் அரசின் சிறப்பு' என குறிப்பிட்டார்.மேலும் நாகர்கோவில் வந்த முதல்வர், வேலம்மாள் பாட்டியை சந்தித்தார். அப்போது, 'முதியோர் பென்ஷன் வேண்டும்; குடியிருக்க வீடு வேண்டும்' என அவரிடம் பாட்டி கோரிக்கை வைத்தார்.
முதல்வர் உத்தரவின்படி மாதம், 1,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால் வீடு வழங்குவதில் இழுபறி நீடித்தது. பாட்டியை தி.மு.க., அரசு ஏமாற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.இந்நிலையில், நாகர்கோவில் ஆர்.டி.ஓ., சேதுராமலிங்கம் இரு தினங்களுக்கு முன் இரவு, வேலம்மாள் பாட்டிக்கு வீடு வழங்கும் ஆணையை வழங்கினார்.
பாட்டியின் இருப்பிடத்திலிருந்து 30 கி.மீ.,யில், அஞ்சுகிராமத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய தொகுப்பு குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டது.ஆள் அரவமற்ற பகுதியில் வீடு இருப்பதால், பாட்டியின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.எனவே, 'பாட்டி தற்போது குடியிருக்கும் புளியடியில் வீடு வழங்காதது ஏன்?' என்ற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர்.இதற்கிடையே, அரசு வழங்கிய வீட்டின் மதிப்பு, 7.50 லட்சம் ரூபாய். அதற்கான அரசு நிர்ணயித்த முன்கட்டணம் 76 ஆயிரம் ரூபாயை, தி.மு.க., நிர்வாகி பூதலிங்கம்பிள்ளை, கலெக்டரிடம் செலுத்தினார்.
மூதாட்டிக்கி வீடு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி இப்படி போராடினால் தான் வீடு கிடைக்கும் என்று தோன்றுகிறது தமிழ்நாட்டில் இன்னும் எத்தனையோ வயதானவர்கள் உள்ளனர் அவர்களையும் கவனித்தால் நல்லது்