dinamalar telegram
Advertisement

மாணவர்களுக்கு பரிசளிப்பு

ADVERTISEMENT
புதுச்சேரி : லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் நடைபெற்ற 75வது ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசபக்திப் பாடல் பாடிய மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப் பட்டது.

கல்லுாரி இயக்குநர் (பொறுப்பு) செல்வராஜ் தலைமை தாங்கி, தேசியக் கொடி ஏற்றினார். பின், சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் கல்லுாரி அரங்கில் நடைபெற்றது.முன்னாள் தாவரவியல் பேராசிரியர் ராமானுஜம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'சுதந்திர போராட்டத்தில் புதுச்சேரியின் பங்கு' என்ற தலைப்பில் பேசினார்.நிகழ்ச்சியை தமிழ்த் துறை தலைவர் குழந்தைசாமி ஒருங்கிணைத்தார்.ஆங்கிலத் துறை தலைவர் ராஜவேலு, 'பாரத விடுதலை வாழி' என்ற தலைப்பில் சுதந்திர தின கவிதை வாசித்தார்.

முதுகலை மாணவர்கள் சீத்தாலட்சுமி, வசந்த்குமார் ஆகியோர், பேராசிரியர் ராஜவேலுவின் கவிதையை இசையமைத்து பாடினர்.தேசபக்தி பாடல்களை பாடிய மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் பழனிசாமி தொகுப்புரை வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement