dinamalar telegram
Advertisement

இன்ஜி.,கவுன்சிலிங்கில் பங்கேற்பது எப்படி? கடலூர், விழுப்புரத்தில் 21ம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி

ADVERTISEMENT
புதுச்சேரி : இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்வது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் நடத்தும், 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, வரும் 21ம் தேதி கடலுார் மற்றும் விழுப்புரத்தில் நடைபெறுகிறது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இன்ஜினியரிங்கில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்து உள்ளனர்.அவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தரவரிசை பட்டியல்,நேற்று16ம் தேதி வெளியிடப்பட்டது.வரும்20ம் தேதிசிறப்பு பிரிவினருக்கும் (விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள்), 25ம் தேதி பொது பிரிவினருக்கும்கவுன்சிலிங் துவங்க உள்ளது.

கவுன்சிலிங் நடைமுறைகளை மாணவர்கள் எப்படி கடைப்பிடிக்க வேண்டும்; தங்களுக்கான பாடப்பிரிவை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்குவதற்காக, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'உங்களால் முடியும்' என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.இந்நிகழ்ச்சி, கடலுார் மற்றும் விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி நடக்கிறது.கடலுாரில், திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர்., லட்சுமி சோரடியா நினைவு மெட்ரிக் மேநிலைப் பள்ளியில், காலை 10:00 மணி முதல் பகல் 12:30 வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழுப்புரத்தில், சென்னை-திருச்சி ரோட்டில் உள்ள தெய்வானையம்மாள் மகளிர் கல்லுாரியில்,மாலை 3:௦0 மணி முதல் 5:30 வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியை,'தினமலர்' நாளிதழுடன், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம் இணைந்துநடத்துகிறது.இந்த நிகழ்வுகளில், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வது குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆலோசனை வழங்குகிறார்.

இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து, கவுன்சிலிங் குழு நிபுணரும், அண்ணா பல்கலை பேராசிரியருமான நாகராஜன் விளக்கம் அளிக்கிறார்.ஒவ்வொரு மாணவரும் தங்களின் தரவரிசைக்கு ஏற்ப, விருப்பமான பாடப்பிரிவுகள் மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து விளக்கப்படும்.'ஆன்லைன் கவுன்சிலிங்' நடைமுறைகள் என்ன, ஆன்லைன் கவுன்சிலிங்கின் விருப்ப பதிவு நடைமுறைகள், இடங்களை தேர்வு செய்யும் முறை, கிடைத்த இடங்களை உறுதி செய்வதுகுறித்துவிளக்கம் அளிக்கப்படும். கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் நிபுணர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

கட்டணம் இல்லை

மாணவர்களும், பெற்றோரும் கவுன்சிலிங் தொடர்பான தங்களின் சந்தேகங்களை, நிபுணர்களிடம் நேரில் கேட்டு, அதற்கான விளக்கங்களை தெரிந்து கொள்ளலாம்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, கவுன்சிலிங் குறித்து விளக்கங்கள் பெற, எந்த கட்டணமும் கிடையாது; அனுமதி இலவசம்.நிகழ்ச்சிக்கு வருவோர், www.kalvimalar.com என்ற இணையதளம் அல்லது 91505 74441 என்ற மொபைல் எண்ணில் 'வாட்ஸ் ஆப்' வழியாக, தங்களின் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்யலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement