dinamalar telegram
Advertisement

போலீசாரிடம் மண்டியிட்ட பெண் சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ



புதுச்சேரி : புதுச்சேரி பஸ் நிலையத்தில், போலீசாரிடம் பெண் மண்டியிட்டு கெஞ்சும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த வீடியோவில், 'புதுச்சேரி புது பஸ் நிலைய வளாகத்தில், உள்ளூர் பஸ்கள் நிற்குமிடத்தில் போலீசார் மூவர் நிற்கின்றனர். அவர்கள் எதிரில், சேலை அணிந்த பெண் ஒருவர், மண்டியிட்டு கைகூப்பி கெஞ்சுகிறார். அருகே சுடிதார் அணிந்த பெண் கை வணங்கி நிற்கிறார். அவர்களை போலீசார் வெளியே செல்லுமாறு கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது. . 20 நொடிகள் ஓடும் இந்த வீடியோ, நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகியது.
விசாரித்ததில், பாலியல் தொழிலில் ஈடுபடும் உள்ளூர், வெளியூர் பெண்களுக்கு இடையே 15 நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், உள்ளூர் பெண் பாட்டிலால் அடித்து காயப்படுத்திய வழக்கில் இருவர் கைதாகினர். இவ்வழக்கு தொடர்பாக, பண்ருட்டியை சேர்ந்த இரு பெண்களிடம் பஸ் நிலையத்தில் உருளையன் பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, இரு பெண்களும் மண்டியிட்டு, கைகூப்பி கெஞ்சியுள்ளனர். இதனால் அவசரமாக போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தை வீ'டியோ எடுத்தவர், சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement