dinamalar telegram
Advertisement

ஆன்லைன் வசதி தடைபட்டதால் பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்

ADVERTISEMENT
புதுச்சேரி: கோரிமேடு எல்லையில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடியில் அமைந்துள்ள ஆர்.டி.ஓ., பர்மிட் வழங்கும் அலுவலகத்தில் ஆன்லைன் வசதி தடைபட்டதால் , வாகனங்கள் நள்ளிரவு வரை காத்திருந்தன.

புதுச்சேரியில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கும், வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வருவதற்கும், வர்த்தக ரீதியிலான வாகனங்களுக்கு கோரிமேடு எல்லையில் புதுச்சேரி ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி மூலம் பர்மிட் வழங்கப்படுகிறது.24 மணி நேரம் இயங்கும் இந்த ஆர்.டி.ஓ., பர்மிட் வழங்கும் அலுவலகத்தில், நேற்று இரவு 8.30 மணி முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதி தடைபட்டது. இதனால் புதுச்சேரியில் இருந்து மேல் மருவத்துார், திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வேன், மற்றும் கார், பர்மிட் போட முடியாமல் நள்ளிரவு வரை காத்திருந்தனர்.

அதேபோல் வெளிமாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த வாகனங்களுக்கும் பர்மிட் போட முடியாததால், வாகன டிரைவர்கள், டிராவல்ஸ் உரிமையாளர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். பொறுமை இழந்த அவர்கள் அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் ஆன்லைன் வசதி தடைபட்டால் 'ஆப்லைன் "மூலம் பர்மிட் கொடுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் நள்ளிரவு கடந்தும் ஆன்லைன் வசதி வேலை செய்யாததால் பல மணி நேரம் டிராவல்ஸ் உரிமையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

இதுகுறித்து தனியார் டிராவல்ஸ் உரிமையாளர்கள் கூறும் போது, கோரிமேடு ஆர்.டி.ஓ., சோதனைச்சாவடி அலுவலகத்தில் இணையதள சேவை தடைபட்டதால் பல மணி நேரம் காக்க வேண்டி உள்ளது. இதனால் எங்கள் தொழில் பாதிப்படைகிறது. ஆகையால் கடந்த காலங்களை போல, சூழ்நிலைக்கேற்ப 'ஆப்லைன்" மூலம் பர்மிட் கொடுக்க வேண்டும்" என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement