dinamalar telegram
Advertisement

விநாயகர் சிலை ஊர்வலம்; போலீசார் ஆலோசனை

ADVERTISEMENT
புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு எஸ்.பி.,க்கள், வம்சிதர ரெட்டி, மாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். இன்ஸ்பெக்டர் கண்ணன், பாபுஜி, கார்த்திகேயன், உள்ளாட்சி, பொதுப்பணி, மின்சாரம் மற்றும் வனத்துறை அதிகாரிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வரும் 4ம் தேதி நடக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அமைதியான முறையில் நடத்துவது, ஊர்வலம் அவ்வைதிடலில் துவங்கி நேரு வீதி வழியாக கடற்கரைக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு சிலைகளை கரைப்பதற்கு தேவையான கிரேன் உள்ளிட்ட முன் ஏற்பாடுகள் செய்வது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement