dinamalar telegram
Advertisement

மெல்ல குறைகிறது கொரோனா; புதிதாக 16 பேருக்கு தொற்று

புதுச்சேரி : மாநிலத்தில் மேலும் 16 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று, கடந்த இரு வாரமாக மெல்ல குறைந்து வருகிறது.கடந்த 16ம் தேதி மாநிலத்தில் 410 பேர் கொரோனா தொற்றால் பாதித்திருந்தனர். அவர்களில் 64 பேர் நேற்று முன்தினம் குணமடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 242 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், புதுச்சேரியில் 13 பேர், காரைக்காலில் 3 பேர் என மொத்தம் 16 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப் பட்டது.மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் புதிய தொற்றாளர்கள் இல்லை.

இதனால், தற்போது மாநிலத்தில் 362 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் புதுச்சேரியில் 12 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.புதுச்சேரி - 263 பேர், காரைக்கால்- 58, ஏனாம் - 28, மாகியில் ஒருவர் என மொத்தம் 350 பேர் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.மாநிலத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 9,85,286 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அவர்களில் 7,89,827 பேர் இரு தவணை தடுப்பூசியும், 1,90,940 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement