dinamalar telegram
Advertisement

பெண்ணிடம் ரூ. 5.25 லட்சம் மோசடி; நைஜீரியா வாலிபருக்கு 2 ஆண்டு சிறை

ADVERTISEMENT
புதுச்சேரி : பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, புதுச்சேரி விமான பணிப்பெண்ணிடம் 5.25 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா வாலிபருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெஸ்லீம் மரியோ, 25. பி.ஏ., ஆங்கிலம் படித்துள்ள இவர், தனியார் விமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பிரான்ஸ் நாட்டில் வேலைக்காக முயற்சித்து வந்தார்.இதையறிந்த மர்ம நபர், இவரிடம், கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, பிரெஞ்சு துணை துாதரகம் என்ற பெயரில் இ-மெயில் அனுப்பி, ஆன்-லைனில் 5.25 லட்சம் ரூபாயை பறித்தார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெஸ்லீம் மரியோ கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ஒருவர் பெங்களூருவில் இருந்து கொண்டே, வெளிநாட்டில் இருப்பதுபோல், ஆன்-லைனில் பணம் பறித்திருப்பது தெரிய வந்தது. அவரது இணைய ஐ.பி., முகவரி மற்றும் வி.பி.என்.,ஐ அடையாளம் கண்ட சைபர் கிரைம் போலீசார், பணம் பறித்தது நைஜீரியா நாடு அலிமோஷா பகுதியை சேர்ந்த டைவோ அத்வாலே,33, என்பதை கண்டுபிடித்தனர்.

அவர், பெங்களூர் யாலான்கா கோகிலு லேஅவுட் பகுதியில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 8ம்தேதி பெங்களூரு விரைந்த சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு விசாரணை, புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து, நேற்று நீதிபதி மோகன் தலைமையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட டைவோ அத்வாலேவுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் பிரவீன்குமார் ஆஜரானார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement