dinamalar telegram
Advertisement

மின்னணு சாதன வடிவமைப்பு குறித்த பயிற்சி பட்டறை

ADVERTISEMENT
புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அடல் இங்குபேஷன் சென்டர் சார்பில், மின்னணு சாதன வடிவமைப்பின் அடிப்படைகள் பற்றிய ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. முகாமில், தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 120 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

மின்னணு சாதனங்களை உருவாக்க பயன்படும் ஆர்டுயீனோ குறித்து விளக்கப்பட்டது.ஆர்டுயீனோ மாணவர்கள் ரோபோடிக்ஸ், ஸ்மார்ட் சிஸ்டம்ஸ், ஆட்டோமேஷன் சிஸ்டம்ஸ் போன்ற பல்வேறு பயன்பாடுகள் மற்றும் திட்டங்களை உருவாக்க முடியும் என்று எடுத்துரைக்கப்பட்டது.அடல் இங்குபேஷன் சென்டர் நிர்வாக இயக்குநர் சுந்தரமூர்த்தி மின்னணு சாதன வடிமைப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.பயிலரங்கில் மின்னணுவியல் மற்றும் கருவிப் பொறியியல் துறை தலைவர் முருகா பிரகாஷ், அடல் இங்குபேஷன் தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணு வரதன், தலைமை செயல் அதிகாரி ராஜகுமார், மேலாளர் காமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement