dinamalar telegram
Advertisement

பழைய துறைமுகத்தில் உணவுத் திருவிழா நாளை துவக்கம்

புதுச்சேரி : புதுச்சேரி பழைய துறைமுகத்தில், நாளை முதல் மூன்று நாட்களுக்கு உணவுத்திருவிழா நடக்கிறது.

புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த சுற்றுலாத் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதையொட்டி, சுற்றுலாத் துறையானது, 'வாஸ்கோ' மற்றும் 'பிட்டி இன் பிஸ்டா' உடன் இணைந்து உணவுத் திருவிழாவை நடத்துகிறது. இந்த உணவுத்திருவிழா நாளை 19ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இதன் துவக்க விழா, நாளை மாலை 4:00 மணிக்கு நடக்கிறது. கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்கின்றனர்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் உணவுத் திருவிழாவில், புதுச்சேரியில் உள்ள பிரபல ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் பங்கேற்று விதவிதமான உணவுகள் படைக்க உள்ளன. முன்னதாக, ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. விழாவிற்கு வருபவர்களை மகிழ்விக்க பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், நடனம், மேஜிக் ஷோ, இசை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.பிரபல ஓட்டல்கள் மற்றும் உணவகங்களின் பல்வேறு உணவு வகைகளை ஒரே இடத்தில் குடும்பத்தினருடன் உண்டு மகிழ்ந்திட இந்த உணவுத் திருவிழா வாய்ப்பாக அமையும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement