dinamalar telegram
Advertisement

விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சியாளர்களை நியமிக்க நடவடிக்கை



கிருஷ்ணகிரி : ''தமிழகத்தில் விளையாட்டு போட்டிகளுக்கு போதிய பயிற்சியாளர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், 35வது மாநில ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும், 9 முதல், 12 வயதுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கண்டறிவதற்கான பணிகளை துவங்க இருக்கிறோம். கிருஷ்ணகிரியில் நான்கு நாட்கள் நடக்கும் தடகளப்போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்ய குழு அமைத்து, ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.விளையாட்டு பயிற்சியாளர்கள் குறைவாக உள்ளனர். விரைவில் போதிய பயிற்சியாளர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போது விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுவது மிகவும் குறைந்துள்ளது.வரும் செப்., 12 முதல், 18 வரை உலக மகளிர் டென்னிஸ் போட்டி, சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடக்க உள்ளது.அதற்கு அடுத்து சர்வதேச தரத்திலான போட்டிகளை நடத்த, தமிழக முதல்வர் தயார் நிலையில் ஏற்பாடுகளை செய்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதி பெறாமல் இயங்கும் கிரானைட் குவாரிகளை கண்டறிய, 25 பேர் கொண்ட குழு நேரடியாக ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement