dinamalar telegram
Advertisement

வாலிபரின் அலைபேசிஆய்வுக்காக அனுப்பிவைப்பு

சேலம்:சேலத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபரின் அலைபேசியை பரிசோதனைக்காக போலீசார் திருவனந்தபுரம் அனுப்பினர்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆசிக் 22. சேலம் கோட்டையில் தங்கி வெள்ளி பட்டறையில் பணிபுரிந்தார். அவரை இந்த மாத தொடக்கத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து அலைபேசி பென் டிரைவ் பாகிஸ்தான் கொடியை பறிமுதல் செய்து டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் வழக்குப்பதிவு செய்து ஆசிக்கை கைது செய்தனர்.இந்நிலையில் கடந்த 12ல் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவல்படி அவரது அலைபேசியை சோதனை செய்ய முடிவு செய்தனர்.அதன்படி நீதிமன்ற அனுமதியுடன் நேற்று முன்தினம் ஆசிக் அலைபேசியை போலீசார் திருவனந்தபுரத்துக்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அதன் முடிவுப்படி ஆசிக்கிடம் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் தயாரித்து விசாரிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement