dinamalar telegram
Advertisement

ஆபீசில் இறந்து கிடந்த வி.ஏ.ஓ.,மோகனுார் போலீசார் விசாரணை

நாமக்கல்:உடல்நிலை பாதிக்கப்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இறந்து கிடந்தது குறித்து மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே, என்.தட்டக்கல்லைச் சேர்ந்தவர் வேல்முருகன், 48. இவருக்கு, மனைவி, மகன், மகள் உள்ளனர்.மூன்று ஆண்டுகளாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார் தாலுகா, ஆண்டாபுரத்தில் வி.ஏ.ஓ.,வாக, குடியிருப்பில் தனியாக வசித்தார்.
நேற்று முன்தினம் அவரை, அவரது மனைவி மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார்.இந்நிலையில், வி.ஏ.ஓ., அலுவலகம் திறந்திருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது, வி.ஏ.ஓ., இறந்து கிடந்துள்ளார். மோகனுார் போலீசார், அவர் உடலை மீட்டனர். வழக்கு பதிவு செய்து, அவர் இறந்தது எப்படி என விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement