dinamalar telegram
Advertisement

விதிமீறல்: 50 ஆம்னி பஸ் மீது வழக்கு

சேலம்:சுதந்திர தின விடுமுறையில் விதி மீறியதாக, சேலம், தர்மபுரியில், 50 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சுதந்திர தின விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்லும் பயணியரிடம், ஆம்னி பஸ்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதனால், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள மேட்டுப்பட்டி, ஓமலுார், தொப்பூர், வைகுந்தம் ஆகிய சுங்கச்சாவடிகளில், 386 பஸ்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அதில் விதி மீறியதாக, 50 பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 93 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இரு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததால், அத்தொகையை பயணியரிடம் திருப்பித்தர அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement