dinamalar telegram
Advertisement

10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஓசூர்:ஓசூர் வழியாக, கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற, 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார், பாகலுார் சாலையில், நேற்று முன்தினம் காலை வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை கடத்தி செல்வது தெரிந்தது.

இதனால், லாரியை ஓட்டி வந்த, ஓசூர் அடுத்த தொரப்பள்ளி அருகே கொல்லப்பள்ளியை சேர்ந்த ஜாகீர் அகமது, 30, என்பவரை கைது செய்தனர்.விசாரணையில், வீடு, வீடாக ரேஷன் அரிசியை சேகரித்து, கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த முயற்சித்தது தெரிந்தது.கைதான ஜாகீர் அகமது, ரேஷன் அரிசி மற்றும் லாரியை, கிருஷ்ணகிரி மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம், ஓசூர் டவுன் போலீசார் ஒப்படைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement