dinamalar telegram
Advertisement

அக்கம் பக்கம் சேலம்

மொபைல் கோபுரத்தில் ஏறி
2 பேர் மிரட்டலால் பதற்றம்

தாரமங்கலம், ஆக. 17-
தாரமங்கலம், ராமிரெட்டிப்பட்டி, மந்தை தோப்பூரில் குடிநீர் தொட்டி அமைக்க, மக்கள் வலியுறுத்தினர். கடந்த, 12ல் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி, ஆயமரத்துக்காட்டை சேர்ந்த ரவிக்குமார், 30, முத்து, 28, நேற்று மாலை, அங்குள்ள பி.எஸ்.என்.எல்., மொபைல் போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். தாரமங்கலம் போலீசார், வருவாய்த்துறையினர், ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் பேச்சு நடத்தினர். கலெக்டர் உறுதி அளித்தால் மட்டும், 'கீழே இறங்குவோம்' என, இருவரும் கூறினர். மக்கள் திரண்டதால், தாரமங்கலம் - ஜலகண்டாபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாசில்தார் வள்ளமுனியப்பன், நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 3 மணி நேரத்துக்கு பின் இருவரும் இறங்கினர். 30 நிமிடத்துக்கு பின் போக்குவரத்து சீரானது.
ஆவணங்கள் தீயில் எரிந்து நாசம்
மோசடி பேர்வழிகளின் சதியா?
சேலம், ஆக. 17-
சேலம், வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. அதன் பின்புறம் உள்ள குடோனில் ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அங்கிருந்து, நேற்று இரவு, 8:45 மணிக்கு புகை எழுந்து, சற்று நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. சூரமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, 9:45 மணிக்கு தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வழக்கு ஆவணங்கள், மக்களின் புகார் மனுக்கள் ஆகியவை எரிந்து நாசமாகின. சம்பவ இடத்தில் வடக்கு சரக துணை கமிஷனர் மாடசாமி, பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சீனிவாசன் விசாரணை நடத்தினர். தற்போது சேலத்தில் மோசடி புகார், வழக்குப்பதிவு அதிகரிப்பால், மோசடி நபர்கள் வழக்கில் இருந்து தப்புவதற்காக ஆவணங்களை எரிக்கும் சதிச்செயலில் ஈடுபட்டனரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்து ஏற்படுத்திய வழக்கு
தொழிலாளிக்கு 21 மாதம் சிறை
ஆத்துார், ஆக. 17-
பெத்தநாயக்கன்பாளையம், ஓலப்பாடியை சேர்ந்தவர் பிரேம்குமார், 47. கூலித்தொழிலாளியான இவர், 2019 செப்., 27ல், ஆத்துார் நோக்கி, 'பேஷன் ப்ரோ' பைக்கில் சென்றுகொண்டிருந்தார். வாழப்பாடியை சேர்ந்த, கூலித்தொழிலாளி தங்கவேல், 31. இவர், நண்பர்கள் இருவருடன், 'பஜாஜ் - சி.டி., 100' பைக்கில், ஆத்துார் நோக்கி சென்று கொண்டிருந்தார். கொத்தாம்பாடியில், இரு பைக்குகள் மோதி, பிரேம்குமார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தங்கவேல், அவரது நண்பர்கள் காயம் அடைந்தனர். ஆத்துார் ஊரக போலீசார், 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை, ஆத்துார் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று, மாஜிஸ்திரேட் முனுசாமி, விபத்து ஏற்படுத்திய தங்கவேலுக்கு, 21 மாத சிறை, 5,000 ரூபாய் அபராதம்
விதித்து உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement