Advertisement

கடன் கட்ட முடியாத அவமானம் பாலிடெக்னிக் மாணவர் விபரீதம்

தந்தை வாங்கிய கடனை கட்ட முடியாததை, அவமானமாக நினைத்த பாலிடெக்னிக் மாணவர், தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், நங்கவள்ளி, விருதாசம்பட்டி ஊராட்சி, பழங்கோட்டையை சேர்ந்த, விவசாயி ஆனந்தன், 50. இவரது மனைவி நிர்மலா, 47. இவர்களது மகன் நிர்மல்ராஜ், 18. இவர், மேச்சேரியில் உள்ள, தனியார் பாலிடெக்னிக்கில், முதலாம் ஆண்டு டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார்.

அதே பகுதியை சேர்ந்த, உறவினர் சுதாகர், 28. இவர், 4 ஆண்டுக்கு முன், 40 ஆயிரம் ரூபாயை, ஆனந்தனுக்கு கடனாக கொடுத்தார். அவர், 20 ஆயிரம் ரூபாய் திருப்பி கொடுத்துவிட்டார். மீதி பணத்தை, சுதாகர், நேற்று முன்தினம், ஆனந்தனிடம் கேட்டார். அதில், அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆட்டை பிடித்து சென்றுவிடுவதாக, சுதாகர் கூறினார். இதற்கு நிர்மல்ராஜ் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். அப்போது, 'பணம் தரவில்லை எனில் ஆட்டை பிடித்துச்செல்வேன்' எனகூறிவிட்டு, சுதாகர் சென்றுவிட்டார். இதனால் அவமானமாக எண்ணிய நிர்மல்ராஜ் அன்று இரவு, 9:30 மணிக்கு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நங்கவள்ளி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement