dinamalar telegram
Advertisement

தர்ணா அறிவித்த இந்து முன்னணியினரை தேடிச்சென்று கைது செய்த போலீசார்

தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்ததால், இந்து முன்னணி நிர்வாகிகளை தேடிச்சென்று போலீசார் கைது செய்தனர்.
சென்னையில், இந்து முன்னணி சார்பில் நடந்த, இந்து உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில், அந்த அமைப்பின் கலை பண்பாட்டு பிரிவின் செயலரான, சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஈ.வெ.ரா., சிலையை உடைக்க வேண்டும் என பேசினார். இதனால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் தர்ணா நடத்தப்படும் என, மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்தார். அதன்படி சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் இந்து முன்னணி நகர செயலர் சீனிவாசன் தலைமையில் பலர் தர்ணாவில் ஈடுபட தயாராகினர். ஆனால், தாரமங்கலம் போலீசார், முன்னதாகவே தேடி சென்று, பஸ் ஸ்டாண்ட், காமராஜர் சிலை, காந்தி சிலை அருகே இருந்த, அந்த அமைப்பினரை கைது செய்தனர்.
இதையறிந்து, சேலம் கோட்ட பொறுப்பாளர் பழனிசாமி, சேலம் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன், தாரமங்கலம் வந்தபோது, காமராஜர் சிலை அருகே தடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்து, அங்குள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர். மொத்தம், ௪௨ பேரை கைது செய்த போலீசார் தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
29 பேர் கைது
அதேபோல் சேலம் நாட்டாண்மை கழக கட்டடம் முன், இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''கனல் கண்ணன் மீது வழக்குப்பதிந்து, சுதந்திர தினத்தில் கைது செய்து கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆதரவு கட்சிகள் என்ன செய்தாலும் வழக்கு போடுவதில்லை. மாறாக, இந்து முன்னணி, பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மீது, உடனே வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. சட்டத்தை அனைவருக்கும் சமமாக பாவிக்க செய்ய வேண்டும். பேச்சு, கருத்து சுதந்திரம் வழங்க வேண்டும்,'' என்றார். ஆனால் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, பெண் உள்பட, 29 பேரை, போலீசார் கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement