குண்டூசியை விழுங்கிய மாணவர்: அரசு மருத்துவமனையில் அனுமதி
ஓசூர் அருகே, குண்டூசியை விழுங்கிய அரசு பள்ளி மாணவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த மோரனப்பள்ளியை சேர்ந்தவர் ஆனந்த்; இவர் மனைவி தனலட்சுமி; இவர்களது மகன் எல்லேஷ், 12; அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சுதந்திர தினத்தையொட்டி பள்ளி சென்ற மாணவருக்கு, சட்டையில் அணிய தேசியக்கொடி மற்றும் குண்டூசி வழங்கப்பட்டது. அதை சட்டையில் அணிந்த மாணவர், மீண்டும் கொடி மற்றும் குண்டூசியை எடுத்து, தன் சீருடையில் வைத்து கொண்டார். அதே உடையில் நேற்று பள்ளி வந்த மாணவர், குண்டூசியை வாயில் வைத்து கொண்டு விளையாட்டாக தண்ணீர் குடித்தபோது, குண்டூசியை விழுங்கினார்.

இதை பள்ளி உடற்கல்வி ஆசிரியரிடம், மாணவன் எல்லேஷ் தெரிவித்தார். உடனடியாக அவரது தாய் தனலட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு எடுத்த எக்ஸ்ரேவில், மாணவரின் வயிற்றில் குண்டூசி இருந்தது தெரியவந்தது. அதை அகற்ற அங்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மாணவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!