சோழிங்கநல்லுார் மண்டலம், 194வது வார்டு, கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில், 250க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த வார்டில், 1938ம் ஆண்டு வருவாய் ஆவணப்படி, 20 குளங்கள் உள்ளன.ஒவ்வொரு குளமும், 2 முதல் 5 ஏக்கர் பரப்பு உடையது. இவற்றில், வையாபுரி குளம், பெரியகேணி குளம், புல்லக்கேணி குளம் மற்றும் பொதி குளம் ஆகியவை, மாநகராட்சி பராமரிப்பில் உள்ளன.
மீதமுள்ள, 16 குளங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. இந்த குளங்களை மீட்டெடுத்து, நிலத்தடி நீர் அதிகரிக்க வழிவகை செய்ய வேண்டும் என, ஈஞ்சம்பாக்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து, 2019ம் ஆண்டு நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சமூக ஆர்வலர் தங்கவேல் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
வருவாய் ஆவணங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், தலைமை செயலர், நில நிர்வாக ஆணையர், சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோரை கொண்ட குழுவை அமைத்து, குளங்களை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து, குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை மூன்று வருவாய் ஆய்வாளர்கள், 28 சர்வேயர்கள் மூன்று வாரங்கள் அளந்தனர். இதில், வீடு, கடைகள் என, 840 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
நீதிமன்ற உத்தரவுப்படி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கும் பணியை துவங்கியது. கொரோனா, சட்டசபை மற்றும் மாநகராட்சி தேர்தல் காரணமாக, நோட்டீஸ் வழங்குவது தடைப்பட்டது.இந்நிலையில், மீண்டும், மே மாதம், மாநகராட்சி நோட்டீஸ் வழங்கும் பணியை துவங்கியது. மக்கள் பிரதிநிதிககள் தலையீட்டால், நோட்டீஸ் வழங்கும் பணியை மாநகராட்சி நிறுத்தி உள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் குளத்தில், 10க்கும் மேற்பட்ட கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. அவற்றையும், மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்த்துள்ளனர்.நீதிமன்ற உத்தரவை மீறி, கட்டடம் கட்டியவர்கள் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்து குளங்களையும் மீட்க நீதிமன்றம், உத்தரவிட்டும், மாநகராட்சி அதிகாரிகள் குளத்தில் வீடு கட்ட அனுமதி வழங்குகின்றனர். இரவும், பகலுமாக கட்டடம் கட்டுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, வீட்டில் குடியேறியபின், நோட்டீஸ் வழங்குகின்றனர். இது குறித்து கேட்டால், 'எங்களால் என்ன செய்ய முடியும்; கவுன்சிலர்கள் கூறுவதை தான் கேட்கவேண்டி உள்ளது. இல்லையென்றால், மிரட்டலுக்கு ஆளாகிறோம்' என்கின்றனர். அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன். - பொன். தங்கவேல், 50,சமூக ஆர்வலர், ஈஞ்சம்பாக்கம்
வாசகர் கருத்து (7)
கோர்ட் முதலில் இந்த மக்கள் பிரதிநிதிகளை கவுன்சிலர்களை தண்டிக்கணும். பிறகு பாருங்கள் எவனும் வாலாட்டமாட்டான். ஆக்ரமிப்புகளும் இருக்காது.
"தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திரிந்தியாகணும், தப்பு செய்தவன் வருந்தியாகணும்" ஈர வெங்காய திருடர்கள் திருந்தவே மாட்டார்கள்
அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி கொடுத்துள்ளார்கள். அவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள். இங்குள்வர்களை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். புதியவர்களுக்கு உத்தரவிடுங்கள. நடவடிக்கை இல்லையென்றால் சஸபெண்ட் செய்யுங்கள். தானாகவே வேலை நடக்கும். ஆனால் மேலிருந்து கிழே வரை லஞ்சம் வாங்கியிருப்பார்கள. கடும் நடவடிக்கை இல்லையென்றால் எதுவும் நடக்காது.
குளம்மோ, நிலமோ, கட்டிடங்களோ ஆக்ரமிப்பு என்பது அதிகாரத்திலுள்ள ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இவர்கள் இருவரின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்யமுடியாது. ஆகிரமிப்பு விசயத்தில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இரட்டை குழல் துப்பாக்கி மாதிரி.ஆகிரமெபை எதிர்த்து அதிக அளவில் சவுண்ட் வுடுவதும் இவர்களே.
"மக்கள் பிரதிநிதிககள் தலையீட்டால்".... வேற யாரு திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்டம் தான்.....