dinamalar telegram
Advertisement

பேருந்து நிலைய நுழைவாயிலில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு

ADVERTISEMENT


காஞ்சிபுரம் : நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் ேஷர் ஆட்டோ, வேன்களை, போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்ககான பயணியர் வந்து செல்கின்றனர். காமராஜர் வீதியில் உள்ள பேருந்து நிலையத்தின் பிரதான நுழைவு வாயிலை மறித்து போக்குவரத்துக்கு இடையூறாக ஷேர் ஆட்டோ, டாடா வேன்களை வரிசையாக நிறுத்தி வைக்கின்றனர்.

இதனால், பயணியர் பேருந்து நிலையத்திற்கு சென்று வர முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இது குறித்தான செய்தி வெளியானதை அடுத்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் போக்குவரத்தை கண்காணிக்க இரு போக்குவரத்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் கண்காணித்து உடனுக்குடன் அப்புறப்படுத்த ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவுறுத்துகின்றனர். அதையும் மீறி நிறுத்தப்படும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.இதனால் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement