dinamalar telegram
Advertisement

சாலை விபத்தில் வாலிபர் பலி



ஆர்.கே.பேட்டை, : ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், வெங்கடகிரியை சேர்ந்தவர் ஜெகதீஷ், 48. இவர், மனைவி, மகன், மகள் உள்ளிட்ட ஐந்து பேருடன், நேற்று முன்தினம் திருத்தணி கோவிலுக்கு 'பொலிரோ ஜீப்'பில் வந்திருந்தார்.தரிசனம் முடித்து வீடு திரும்பும் போது, ஆர்.கே.பேட்டை அடுத்த, தாமரைகுளம் புதுார் அருகே, இவர்களின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது.இதில், ஜெகதீஷ் மகன் ரவிதேஜா, படுகாயம் அடைந்தார்.ஜெகதீஷ் மற்றும் அவரது மனைவி மாதவி, மகள் பிரியங்கா ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள், மேல் சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, ரவிதேஜா நேற்றுஇறந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement