dinamalar telegram
Advertisement

உயரழுத்த மின்சாரம் வினியோகம்; வீட்டு உபயோக பொருட்கள் நாசம்

ADVERTISEMENT


கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டியில், சில நாட்களாக, தொடர் மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், கும்மிடிப்பூண்டி, வள்ளியம்மை நகரில் உள்ள வீடுகளுக்கு, உயர் அழுத்த மின்சாரம் சென்றதால், 15க்கும் மேற்பட்ட வீடுகளில், வீட்டு உபயோக மின் சாதன பொருட்கள் நாசமாகின.வள்ளியம்மை நகரில் வசிக்கும் அமுதா, 48, என்பவர் நிகழ்ச்சி ஒன்றுக்காக, வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்றிருந்தார்.அவரது வீட்டின் மின் ஒயர்கள் எரிந்து, கட்டில், பீரோ, வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின. அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்ததால், தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

இது குறித்து சம்பந்தப்பட்ட கும்மிடிப்பூண்டி துணை மின் நிலைய அலுவலர் ஒருவர் கூறியதாவது:டிரான்ஸ்பார்மரில், ஏற்பட்ட கோளாறு காரணமாக, வீடுகளுக்கு செல்ல வேண்டிய, 220 வோல்ட் மின்சாரம், 440 வோல்ட்டாக சென்றது.அதன்பின் பழுது சரி பார்க்கப்பட்டு சீராக, மின் வினியோகிக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.உடைமைகள் மொத்தமும் இழந்த அமுதா, உரிய இழப்பீடு தர வேண்டும் என, கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement