dinamalar telegram
Advertisement

உத்திரமேரூர் பணி மனைக்கு6வது முறையாக நற்சான்று விருது



காஞ்சிபுரம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், உத்திரமேரூர் பணி மனைக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, ஆறாவது முறையாக, சிறந்த பணி மனை கிளை மேலாளருக்கான பணித்திறன் நற்சான்று மற்றும் விருது வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில் உள்ள ஆறு மண்டலத்தில், 55 பணிமனைகள் உள்ளன.இதில் முறையான பேருந்து பராமரிப்பு, தடத்தில் உள்ள அனைத்து பேருந்தையும் இயக்குதல், டீசல் சிக்கனம், அதிக வருவாய் ஈட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக, ஒரு பணி மனையை தேர்வு செய்து ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவில், சிறந்த கிளை மேலாளருக்கான பணித்திறன் நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பேருந்து இயக்க காலத்தில், அனைத்து பேருந்துகளையும் இயக்கியதற்காக உத்திரமேரூர் பணிமனைக்கு நேற்றுமுன்தினம் பணித்திறன் நற்சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் அர்ஜுன், உத்திரமேரூர் பணிமனை கிளை மேலாளர் கருணாகரனுக்கு சிறந்த பணிமனை கிளை மேலாளருக்கான விருது மற்றும் பணித்திறன் நற்சான்றிதழை வழங்கி பாரட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement