dinamalar telegram
Advertisement

ரூ.27 லட்சம் ஹவாலா பணம் வாகன சோதனையில் பறிமுதல்

ADVERTISEMENT
சென்னை : சென்னையில், வாகன சோதனையின் போது, 27 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்னை, வால்டாக்ஸ் சாலை ரோடு, பத்மநாபா தியேட்டர் அருகில், நேற்று, ஏழுகிணறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, மோட்டார் சைக்களில் வந்த, புதுச்சேரி, காரைக்கால், கல்மாட்டு தெருவை சேர்ந்த முகமது ஷுப், 30, என்பவரை, சந்தேகித்து விசாரித்தனர்.

மோட்டார் சைக்கிள் இருக்கையின் கீழ் சோதனையிட்டதில், 27 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் இருந்தது. அவரிடம் அந்த பணம் குறித்து, போலீசார் விசாரித்தனர். மூன்று ஸ்டீல் கம்பெனியில் இருந்து வசூல் செய்யபட்ட பணத்தை, கிருஷ்ணகிரியில் உள்ள நிறுவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.ஆனால், ஆவணமில்லாததால், ஹவாலா பணமாக இருக்கலாம் என அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement