dinamalar telegram
Advertisement

மீன் வளர்க்க மானியம்



திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், மீன் வளர்ப்பு செய்ய, 40 சதவீதம் மானியம் வழங்கப்படும்.திருவள்ளூர் மாவட்டத்தில், மீன் வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின்கீழ், அலங்கார மீன் வளர்க்க, 40 சதவீதம் மானியம் வழங்கப்படும்.குளிரூட்டப்பட்ட வாகனம் வாங்க,உறைபதன சேமிப்பு அறை, புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளம் அமைத்தல்; உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர், மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், வேண்பாக்கம், பொன்னேரி என்ற முகவரியில் நேரடியாகவும், 044 -2797 2457 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளுமாறு, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement