dinamalar telegram
Advertisement

ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் மோதல் கல்லூரி மாணவர் ஒருவருக்கு வெட்டு



ஏகாட்டூர், : ஏகாட்டூர் ரயில் நிலையத்தில், கல்லுாரி மாணவரை வெட்டியும், நடைமேடையில் கத்தியால் தேய்த்தும் மின்சார ரயில்கள் மீது கற்கள் வீசியும் அராஜகத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த தக்கோலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 19. பச்சையப்பன் கல்லுாரி மூன்றாம் ஆண்டு மாணவர்.இவர், நேற்று காலை ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.


அப்போது, சென்னை செல்லும் புறநகர் மின்சார ரயிலில் வந்த மாநிலக் கல்லுாரி மாணவர்களுக்கும் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில், மாநில கல்லுாரி மாணவர்கள், தினேஷ்குமாரை கத்தியால் வெட்டி கல்லால் தாக்கியுள்ளனர். இதனால் பயணியர் பீதியடைந்தனர். இதில், காயமடைந்த தினேஷ்குமார், நண்பர்கள் உதவியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் டி.எஸ்.பி., சந்திரதாசன், தினேஷ்குமாரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.மேலும், தினேஷ்குமார் அளித்த புகாரையடுத்து,


திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல், '10க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரயில் நிலைய நடைமேடையில் கத்தியால் தேய்த்தும், மின்சார ரயில் மீதும் கற்கள் வீசியும் ரயில் பயணியரை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டனர். 'இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரையாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ், 45, என்பவர் திருவள்ளூர் ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement