dinamalar telegram
Advertisement

எண்ணெய் உற்பத்திக்கு வேர்க்கடலை

ADVERTISEMENT


களிமண் நிலத்திலும், ஆந்திர ரக வேர்க்கடலை சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி விவசாயி பி.குகன் கூறியதாவது:

நான், காய்கறி, கீரை உள்ளிட்ட பல வித காய்கறிகளை ரசாயன உரம் இன்றி விளைவித்து வருகிறேன். வீட்டிற்கு தேவையான காய்கறிகள் போக, மீத காய்கறிகளை விற்பனை செய்து விடுகிறேன்.அந்த வரிசையில், கத்ரிலே பக் ஷி என அழைக்கப்படும் ஆந்திர ரக வேர்க்கடலை சாகுபடி செய்தேன். ௧ ஏக்கருக்கு, 25 மூட்டை வரையில் மகசூல் கிடைத்தது. இது, பிற ரக வேர்க்கடலை காட்டிலும், கூடுதல் மூட்டை பெற முடிந்துள்ளது.

குறிப்பாக, தரமான விதைகளை தேர்வு செய்து, சீரான இடைவெளி விட்டு வேர்க்கடலை விதைத்தால் போதும். செடிகளுக்கு நல்ல காற்றோட்டம் கிடைத்து, கூடுதல் மகசூலுக்கு வழி வகுக்கிறது.இந்த ரக வேர்க்கடலை எண்ணெய் உற்பத்தி திறன் அதிகமாக இருப்பதால், விளைப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு சிறந்த ரகம் என, கூறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:-பி. குகன் 94444 74428.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement