dinamalar telegram
Advertisement

கூடுதல் மகசூலுக்கு புழுதி நாற்றாங்கால்;

ADVERTISEMENT


புழுதியில் நாற்றாங்கால் அமைப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த இளங்கலை பட்டதாரி விவசாயி எஸ்.கோகுல் கூறியதாவது:

எங்களுக்கு சொந்தமான நிலத்தில், பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். பொதுவாக, நேரடி விதைப்பு மற்றும் நாற்று நடவு முறை விவசாயத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.நாங்கள் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த நாகரத்தினம் முன்னோடி விவசாயி சாகுபடி செய்யும் முறையை, இந்த முறை கடைப்பிடித்துள்ளோம்.

இது, புழுதியில் நாற்றாங்கால் அமைத்து, தாய் மண்ணுடன் நாற்று எடுத்து நடவு செய்யும் முறையாகும்.இந்த நடவு முறை கடைப்பிடிப்பதால், இயற்கை விவசாயத்திலும் கூடுதல் மகசூல் பெற முடியும். குறிப்பாக, ௧ ஏக்கர் நிலத்தில் 2 கிலோ விதை நெல்லை பயன்படுத்தி, 20 மூட்டை மகசூல் எடுக்கலாம்.இதில், சற்று வேலைப்பாடு கூடுதல் தான். இருப்பினும் கூடுதல் வருவாய்க்கு வழி வகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:- எஸ்.கோகுல், 90878 02435.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement