dinamalar telegram
Advertisement

புறாக்களுக்கும் பண்ணை அமைக்கலாம்; விவசாய மலர் பகுதிக்கு...

ADVERTISEMENT


திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த, சோமசுந்தரம் கிராமத்தைச் சேர்ந்தபுறா பண்ணை விவசாயி எஸ்.பாபு கூறியதாவது:

ஆடு, மாடு, கோழிகளுக்கு பண்ணை வைத்திருப்பது போல, புறாக்களுக்கும் பண்ணை அமைத்து புறாக்கள் வளர்ந்து வருகிறேன். இங்கு, உள்ளூர் புறாக்கள் முதல், அயல் நாட்டு புறாக்கள் வரையில் வளர்த்து வருகிறேன்.இது, அலங்காரம் மற்றும் இறைச்சிக்கு விற்பனை செய்யப்படுகிறது. சிறிய தொகையில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யக்கூடிய புறா ரகங்கள் உள்ளன. அதற்கு ஏற்ப புறா கூண்டுகளை வடிவமைத்துள்ளேன்.

உதாரணமாக, பெரிய கூண்டு ஒட்டியவாறு, புறா குஞ்சு பொறிப்பதற்கு சிறிய அளவிலான கூண்டு அமைத்து, இணைப்பு ஏற்படுத்தி உள்ளேன்.புறா வளர்ந்த பின், பெரிய கூண்டில் சென்று சவுகரியமாக திரிவதற்கு ஏற்ப வடிவமைத்து உள்ளேன்.நோய் மற்றும் முறையான தடுப்பு நிர்வாகம் செய்தால், புறா வளர்ப்பு மூலமாக, கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு:-எஸ்.பாபு, 95009 61319.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement