dinamalar telegram
Advertisement

ஆனைமலை ஏலத்தில்கொப்பரை விலை சரிவு

ADVERTISEMENT
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை வரத்து அதிகரித்து, விலை சரிந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், நேற்று, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 289 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 72.30 முதல், 78.70 ரூபாய் விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 318 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு, 60.40 முதல், 68 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம், 608 கொப்பரை மூட்டைகளை, 85 விவசாயிகள் கொண்டு வந்தனர், 7 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் கொப்பரை, 300 மூட்டைகள் வரத்து அதிகரித்தது; விலையும் கிலோவுக்கு, 2.45 ரூபாய் சரிந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement