dinamalar telegram
Advertisement

விடுமுறை அளிக்காத178 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கோவை:சுதந்திரதின நாளில், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, 178 நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்ரி கூறுகையில், ''தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல், சம்பந்தப்பட்ட தொழிலாளர் ஆய்வாளருக்கு உரிய படிவத்தில் முன்னறிவிப்பு அளிக்காமல், தொழிலாளர்கள் அன்றயை தினம் பணிபுரிய அனுமதித்த 92 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 83 உணவு நிறுவனங்கள் மற்றும் மூன்று மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட மொத்தம், 178 நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது, சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement