dinamalar telegram
Advertisement

இன்று முதல் 2ம் தேதி வரைசிறப்பு தொழில் கடன் விழா

கோவை:கோவையில் சிறப்பு தொழில் கடன் விழா இன்று துவங்கி வரும், 2ம் தேதி வரை நடக்க உள்ளது.கோவை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை:முகாம் நடக்கும் கோவை அலுவலகம் டாக்டர் நஞ்சப்பா ரோடு,யுனைடெட் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், முதல் மாடியிலும், குறிச்சி கிளை அலுவலகம் குறிச்சி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கொசிமா காம்ப்ளக்ஸிலும் செயல்படுகிறது.இச்சிறப்பு தொழில் கடன் விழாவில், டி.ஐ.ஐ.சி.,யின் சிறப்பு தொழில் திட்டங்கள், புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மூலதன மானிய திட்டங்கள் குறித்து விரிவானவிளக்கம் அளிக்கப்படுகிறது. தகுதி வாய்ந்த தொழில்களுக்கு தமிழக அரசின், 25 சதவீத முதலீட்டு மானியம், 150 லட்சம் ரூபாய் வரை விரைந்து பெற்று தர, ஆவண செய்யப்படும்.இந்த விழாவில் சமர்ப்பிக்கப்படும், பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில், 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு, 94443 96841, 94450 23471 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement