dinamalar telegram
Advertisement

ஆதிபராசக்தி கோவிலில்வரும் 22ல் கும்பாபிேஷகம்

ADVERTISEMENT
உடுமலை;உடுமலையில், ஆதிபாராசக்தி கோவில், கும்பாபிேஷகம், வரும் 22ல் நடக்கிறது.உடுமலை ஆண்டாள் சீனிவாசன் லே-அவுட்டிலுள்ள, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தின், கும்பாபிேஷக விழா, இன்று துவங்குகிறது.இன்று, மாலை, 4:00 மணிக்கு, குரு பூஜை, கோபுர கலச ஸ்தாபிதம், ஆதிபராசக்தி அம்மன் சிலையை அர்த்த மண்டபத்தில் எழுந்தருள செய்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.வரும், 21ம் தேதி, காலை, 7:15க்கு, சக்தி கொடி ஏற்றுதல், 11:30க்கு, முதற்கால வேள்வி பூஜை, மாலை, 6:15க்கு, இரண்டாம் காலவேள்வி பூஜை, இரவு, 9:00 மணிக்கு, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.வரும் 22ம் தேதி, காலை, 5:30 மணிக்கு, மூன்றாம் கால வேள்வி பூஜையும், 9:30 முதல் 10:15 மணிக்குள், மகா கும்பாபிேஷகமும் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம், மகா அபிேஷகம் நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement