ADVERTISEMENT
கோவை:ராமநாதபுரம் டிரினிட்டி மேல்நிலைப்பள்ளியில், 75வது சுதந்திர விழா கொண்டாடப்பட்டது.கோவை, விமானப்படை நிர்வாக கல்லுாரியின், பேராசிரியர்குரூப் கேப்டன் சஞ்ஜீவ் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தேசிய கொடி ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளையும், தமிழ்நாட்டின் சிறப்பை பறைசாற்றும் விதமாகவும், விடுதலை வீரர்களின் விடுதலை போராட்ட தியாகத்தை,மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாகவும் மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் அணிவகுப்புநடந்தது. பள்ளி தாளாளர் ஜோசப் புத்தூர், செயலாளர் குரியச்சன் மற்றும் முதல்வர் தனலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!